ஹீரோயின் வாய்ப்பில்லை - இனி இது தான் ஒரே வழி - ரூட் மாற்றிய சமந்தா!!

Samantha Tamil Cinema Tamil Actress
By Karthick Apr 28, 2024 03:42 PM GMT
Report

நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமந்தா

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

samantha-changing-plans-producer-debut-news-movie

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.

samantha-changing-plans-producer-debut-news-movie

விவாகரத்து பிறகும் தொடர்ந்து சினிமாவில் பட்டையை கிளப்பினார். சிறிது காலமாகவே மையோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த பாதிப்பில் இருந்து போராடி மீண்டு வந்துள்ள சமந்தா, தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள "Citadel" வெப் சீரிஸ்-இல் நடித்துள்ளார்.

72 வயது நடிகருக்கு ஜோடியான சமந்தா..அதுவும் இப்படி ஒரு காட்சியில்..?

72 வயது நடிகருக்கு ஜோடியான சமந்தா..அதுவும் இப்படி ஒரு காட்சியில்..?

ஒரே வழி

ஆனால், இப்படங்களுக்கு பிறகு அவர் இது வரை எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. அண்மையில் வெளியான குஷி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. Citadel தொடரும் எப்போது வெளிவரும் என்ற அறிவிப்பும் இல்லை. இந்த நெருக்கடியான சமயத்தில் தான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சமந்தா.

samantha-changing-plans-producer-debut-news-movie

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சமந்தா. பங்காரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயமென்னவென்றால் படத்தின் தயாரிப்பாளரும் அவரே. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் யார், குழுவினர் யார் என்ற எந்த தகவலும் போஸ்டர் இடம்பெறவில்லை.