விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றால் என்ன தப்பு - விளாசிய ராஷ்மிகா!

Vijay Deverakonda Rashmika Mandanna Maldives
By Sumathi 6 நாட்கள் முன்

விஜய் தேவரகொண்டாவுடன் டூர் சென்றால் என்ன தவறு என ராஷ்மிகா பதிலடி கொடுத்துள்ளார்.

காதல் கிசுகிசு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றால் என்ன தப்பு - விளாசிய ராஷ்மிகா! | Maldives With Vijay Deverakonda Actress Rashmika

இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். தொடர்ந்து இருவரும் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், சமீபத்தில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், “சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என் மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.

பதிலடி 

பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றால் என்ன தப்பு - விளாசிய ராஷ்மிகா! | Maldives With Vijay Deverakonda Actress Rashmika

இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என தெரிவித்துள்ளார்.