தாஜ்மஹாலில் மனைவியுடன் அதிபர் - அவர் சொன்னதை கவனிச்சீங்களா?
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார்.
மாலத்தீவு அதிபர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக, இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசிய அவர்,
பிரதமர் மோடியையும் சந்தித்தார். அப்போது இந்தியா - மாலத்தீவு இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், அவரது மனைவி சஜிதா முகமது உடன் தனி விமானத்தில் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு வந்தார்.
இந்திய பயணம்
அவர்களை மாநில அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். இதனையடுத்து அங்குள்ள தாஜ்மஹாலுக்கு இருவரும் காரில் சென்றனர். தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
'தாஜ்மஹாலின் அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இது, காதல் மற்றும் கட்டடக்கலை சிறப்புக்கு ஒரு சான்று' என, பார்வையாளர்கள் புத்தகத்தில், அதிபர் முகமது முய்சு எழுதியுள்ளார்.