சமாதான கொடி கட்டிய மாலத்தீவு; கடன் நெருக்கடியால் இந்தியாவுக்கு ஐஸ் வைத்த அதிபர்!
மாலத்தீவில் கடன் நெருக்கடியால் இந்தியாவிடம் நிவாரணம் கேட்டு அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடன் நெருக்கடி
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. இந்த தீவு இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்து வந்தது. அண்மையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில் மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றார்.
சீன ஆதரவு கொண்ட முய்சு பதவியேற்ற பிறகு, சீனாவுடன் சற்று நெருக்கம் காட்ட தொடங்கியது மாலத்தீவு. இதனால், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்டனர்.
எனவே, இரு நாடுகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டது.
ஐஸ் வைத்த அதிபர்
இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபர் மூயிஸ் அனைத்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மாலத்தீவுக்கு மிகப்பெரிய உதவி வழங்குவதில் இந்தியா பெரிய பங்கு வகித்தது.
பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை செயல்படுத்தியது. எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள் ளநிலையில் அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது.
எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனை த் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்.
இதை இந்திய அரசுச் செய்யும் என நம்புகிறேன். மாலத்தீவின் பொருளதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.