39 பேருடன் கடலில் அப்படியே மூழ்கிய கப்பல் - திகில் கிளப்பிய நிமிடங்கள்!
கடற்படை கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியது.
கடற்படை கப்பல்
மலேசிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கே.டி. பென்டேகர். இது ஸ்வீடனில் தயாரிக்கப்பட்டு 1978ம் ஆண்டு கடற்படைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 45 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கப்பல், தென்ஜூங் பெனுயுசிப் பகுதியில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடலுக்கடியில் ஏதோ ஒரு மர்ம பொருள் இடித்ததில் சேதம் அடைந்து நீர் உள்ளே புக ஆரம்பித்தது.
39 பேரின் நிலை
உடனே, கடற்படை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட, மீட்புக் குழுவினர் கப்பலுக்கு விரைந்தனர். தொடர்ந்து, சீரமைக்க முயற்சி செய்தபோதிலும், கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது. ஆனால், 39 சிப்பந்திகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
4 மணி நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது. இதனையடுத்து. விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கடற்படை கேட்டுக்கொண்டுள்ளது.