திருப்பதி பிரமோற்சவ விழாவில் நடந்த நிகழ்வு - பார்த்ததுமே மெய்சிலிர்த்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது . அந்த வகையில் 5-ஆம் நாளான பிரமோற்சவிழா கோலாகலமாக நடைப்பெற்றது.
அதன்படி ,நேற்று காலை பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்த அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக,
மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.இந்த அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் மாயமோகத்தை போக்கும் விதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரமோற்சவம்
மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாட்சியாருடன் கிருஷ்ணரும் அருள் பாலித்தார்.
இதையடுத்து, இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகவான கருட வாகன புறப்பாடு நடைபெறவுள்ளது. பிரமோற்சவத்தினை காண 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.