புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு; நாளுக்கு நாள் எடை குறைகிறது - பக்தர்கள் புகார்!

Tamil nadu
By Jiyath Aug 03, 2023 08:19 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் எடை குறைந்து வருகிறது என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிராசதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிராசததிற்கு இப்போது 308 வயதாகிறது. ஏழுமலையான் கோவில் லட்டு பிராசாதங்கள் 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை 'மகா பிராசாதம்' என்று அழைக்கப்படுகிறது.

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு; நாளுக்கு நாள் எடை குறைகிறது - பக்தர்கள் புகார்! | Tirupati Laddu Devotees Complain Losing Weight I

ஆரம்ப காலத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி பின்னர் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், என்னை, கற்கண்டு, பாதாம், பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட மூலப் பொருட்களைக் கொண்டு இந்த லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தேவஸ்தானத்தில் இந்த லட்டு பிரசாதம் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 300 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுகள் இங்கு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக புவிசார் குறியீடு மற்றும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

3 வகையான லட்டுகள்

இங்கு மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப் படுகிறது. இதில் 'அஸ்தானம்' என்று அழைக்கப்படும் லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 70 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசுத் தலைவர்,பிரதமர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு; நாளுக்கு நாள் எடை குறைகிறது - பக்தர்கள் புகார்! | Tirupati Laddu Devotees Complain Losing Weight I

இரண்டாவது வகையான 'கல்யாண உற்சவ லட்டு' என்று அழைக்கப்படும் லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப் படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதற்காக பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழித்து பெறுகிறார்கள். மூன்றாவது வகையான 'புரோகிதம்' என்ற லட்டு பக்தர்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இதன் எடை 175 கிராம் எடை இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வழங்கப்படும் இந்த லட்டின் எடை குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.5 ரூ.10 ரூ.25 விலைகளில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பக்தர்கள் புகார்

இந்நிலையில் நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என்று பக்தர்கள் புகார் தெரிவித்ததுள்ளனர். எனவே சரியான எடையில் லட்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டு என்று வலியுறுத்தியுள்ளனர்.