மலையாள படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான்

actor rahman flim music malayalam
By Jon Mar 23, 2021 04:11 PM GMT
Report

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மலையாள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழில் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் அதன் பிறகு தமிழ் முதல் ஹாலிவுட் படங்கள் வரை இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார்.

அவர் நடித்த முதல் படமும் இதுதான். இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம்.

படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.