நொறுங்கி போன கார் - மருத்துவமனையில் மலையாள இளம் நடிகர்களின் நிலை என்ன?
இளம் பிரபல மலையாள நடிகர்களுக்கு கார் விபத்து நடந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விபத்து
மலையாளத்தில் தற்போது Bromance என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் சேசிங் காட்சி ஷூட்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நிலை என்ன?
விபத்தில் சிக்கிய நடிகர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்கள். இது தொடர்பாக போலீசார் அதிவேகமாக வாகனம் இயக்குதலின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
மேலும், தாற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. பிரேமலு படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார் சங்கீத் பிரதாப். அர்ஜுன் அசோகன் மலையாளத்தில் முக்கியமான நடிகராக உள்ளார்.
அண்மையில் வெளிவந்த பிரம்மயுகம் படத்தில் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேத்யூ தாமஸ் லியோ படத்தில் நடித்த தமிழகத்தில் அறிமுகம் பெற்றார்.