சம்பவ இடத்திலேயே மரணம்....பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகர்!!

Vijay Kerala Accident Leo
By Karthick May 16, 2024 08:01 AM GMT
Report

நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமாகினார் மேத்யூ தாமஸ்.

மேத்யூ தாமஸ்

மலையாள திரை உலகில் புகழ்ப்பெற்ற இளம் நடிகராக வளம் வருகிறார் மேத்யூ தாமஸ். பெரும் வெற்றி பெற்ற கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜோ அண்ட் ஜோ, தண்ணீர் மதன் தினங்கள் என பல படங்களில் நடித்துள்ளார்.

leo actor mathew thomas accident one death

தமிழில் விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான "லியோ" படத்தில் விஜய்யுக்கு மகனாக நடித்து தமிழ் திரை ரசிகர்களிடமும் பிரபலமடைந்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

விபத்து

இவரின் குடும்பம் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவை முடித்து கொண்ட பிறகு, வீட்டிற்கு திரும்பிய போது பயங்கர கார் விபத்து நடந்துள்ளது.

ஷூட்டிங்கின் போது விபத்து உடலில் பல இடங்களில் காயமடைந்த விஜே பிரியங்கா..!!

ஷூட்டிங்கின் போது விபத்து உடலில் பல இடங்களில் காயமடைந்த விஜே பிரியங்கா..!!

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் என்பவர் உயிரிழந்துள்ளார். மேத்யூ தாமஸின் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

leo actor mathew thomas accident one death

மலையாள திரையுலகில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அவரின் குடும்பம் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனைகள் செய்து வருகிறார்கள்.