நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி - மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்!
நடிகர் மோகன்லால் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மோகன்லால்
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அதீத காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் தசைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 54 .
இது குறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவித்திருப்பதாவது: மலையாள நடிகர் மோகன்லால் கடும் காய்ச்சல், மூச்சு திணறல், சுவாச தொற்றால் தசை வலி உள்ளிட்டவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை அடுத்த 5 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
I think #Mohanlal will be one of the fewest senior main stream actor in india who always engaged in some or the other work almost for the entire day without rest. Hope you get well soon laletta. And take care of your health as well while running behind everything. ?❤️❤️ pic.twitter.com/JRAO83aFhs
— Sreerag A V (@SreENthusiastic) August 18, 2024
முன்னதாக மோகன்லால் வயநாட்டின் சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார், மேலும் வயநாட்டில் பாரிய நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்திய மறுவாழ்வுக்காக விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ₹3 கோடியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.