Insta couple ; 10 வயது வித்தியாசத்தில் திருமணம்- அம்மா மகனா? கலாய்த்த நெட்டிசன்கள்!

By Swetha May 22, 2024 10:18 AM GMT
Report

ஷெஃபி - ஷெமி தம்பதிகள் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்தனர்.

வயது வித்தியாசம்

இந்த காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் சில மக்கள் தங்களது அன்றாட வாழ்கை, முக்கியமான நிகழ்வுகள், அல்லது பாடலுக்கு நடனமாடி வீடியோவை ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து relatable வீடியோ பதவிடுபவர்களுக்கென ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

Insta couple ; 10 வயது வித்தியாசத்தில் திருமணம்- அம்மா மகனா? கலாய்த்த நெட்டிசன்கள்! | Kerala Couple Spoke About Their Age Difference

குறிப்பாக கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ ஜோடியாக பதிவிடும் couples வீடியோகளை ரசிக்கவும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த வகையில், கேரளாவை சேர்ந்த ஒரு தம்பதி வீடியோ பதிவிட்டதுக்கு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு யூடியூபில் மட்டும் சுமார் 3 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர்.

அதாவது ஷெஃபி - ஷெமி என்ற இந்த கேரளா தம்பதிகள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களது திருமண உறவு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதன் காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் தான்.

கலாய்த்த நெட்டிசன்கள்

இதில், ஷெமிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது ஷெஃபி உடன் பழகி வந்த இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

Insta couple ; 10 வயது வித்தியாசத்தில் திருமணம்- அம்மா மகனா? கலாய்த்த நெட்டிசன்கள்! | Kerala Couple Spoke About Their Age Difference

ஷெஃபியை விட ஷெமி குறைந்தது 10 வயதேனும் மூத்தவராக இருப்பார்.இதனால், இவர்கள் பதிவிடும் வீடியோகள் கீழ் நெட்டிசன்கள் தம்பதிகள் போல் இல்லை அம்மாவை மகனையும் போல உள்ளது என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ஆரம்பத்தில் இது போன்ற கமெண்டுகளுக்கு தினமும் அழுததாக ஷெமி தெரிவித்தார்.

மேலும், “ஷெஃபி பணத்துக்காக என்னை திருமணம் செய்துக்கொண்டதாக சிலர் கமெண்ட் செய்கின்றனர். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் எதுவுமில்லை. எனக்கென சொந்தமாக ஒரு வீடு மட்டுமே உள்ளது” என ஷெமி கூறினார்.

Insta couple ; 10 வயது வித்தியாசத்தில் திருமணம்- அம்மா மகனா? கலாய்த்த நெட்டிசன்கள்! | Kerala Couple Spoke About Their Age Difference

அதுமட்டுமல்லாமல், ஷெஃபியிடம் தான் பார்த்த நற்குணங்கள் குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனது இரண்டாவது திருமணம் குறித்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், தன்னை விட இளைய வயது ஆணை திருமணம் செய்துக்கொண்டால் என் வாழ்க்கை என்னவாகும் என அவர்கள் யோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.