துணை அதிபருடன் மாயமான ராணுவ விமானம் - தேடுதல் பணி தீவிரம்!
மலாவி நாட்டு துணை அதிபர் பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது.
விமானம் மாயம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா இருந்து வருகிறார். இவர் தலைநகர் லிலொங்வேயில் இருந்து ராணுவ விமானம் மூலம் மசுஸு சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அந்த விமானத்தில் சவ்லோஸ் சிலிமா உட்பட 9 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சென்ற ராணுவ விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் திடீரென மாயமாகியுள்ளது.
அதிபர் உத்தரவு
கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் விலகியதால் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேட மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா மாயமான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தனது வெளிநாட்டு பயணத்தையும் அவர் ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மலாவி நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.