முஸ்லிம் நாட்டு சர்வதேச விமான நிலையத்திற்கு இந்து மத நபரின் பெயர் - எங்கு தெரியுமா..?
இந்தோனேஷிய நாட்டின் பாலி சர்வதேச விமான நிலையம் குறித்த தகவல்.
காஸ்தி கவுரா ராய்
இந்தோனேஷியா நாட்டின் பாலி சர்வதேச விமான நிலையத்திற்கு 'காஸ்தி கவுரா ராய்' என்ற இந்து மத நபரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமான நிலையத்தில் இந்து மத கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. கவுரா ராய் என்பவர் இந்தோனேஷிய ராணுவத்தில் சேர்ந்து உயர் பதவியில் இருந்தார்.
பாலி விமான நிலையம்
டச்சு ஆக்கிரமிப்பிலிருந்து தனது தாய்நாட்டை மீட்க கடுமையாக போராடி வெற்றியும் கண்டார். கவுரா ராயின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் விதமாக அவருக்கு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தோனேஷியாவின் சில முக்கிய இடங்களில் அவரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கவுரா ராயை கவுரவிக்கும் விதமாகத்தான் இந்தோனேஷிய முஸ்லிம் அரசு அவரின் பெயரை பாலி சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளது.