தயக்கம்'ல இல்ல - படவாய்ப்பிற்காக அந்த தப்பான விஷயங்களை செஞ்சேன்..! போட்டுடைத்த மாளவிகா
தனது திரைப்பட அனுபவங்களை நடிகை மாளவிகா மேனன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மாளவிகா மேனன்
விக்ரம் பிரபுவின் "இவன் வேறமாதிரி" என்ற படத்தில் நாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன். மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மாளவிகா மேனன், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார்.

முன்னணி நாயகியாக வர முடியாத நிலையிலும், தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டே இருக்கின்றார் மாளவிகா. இந்நிலையில், ஆரம்பத்தில் தான் திரையுலகில் செய்த தவறுகளை குறித்து வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் மாளவிகா மேனன்.
அந்த தவறுகள்
அந்த பேட்டியில், 2011 ஆம் ஆண்டு நான் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டேன் என்றாலும் எனக்கு தொடர்ந்து படங்கள் அமையவில்லை. இதற்கு முக்கியமான காரணம் நல்ல பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் செய்த தவறுதான் நிறைய படங்களில் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால் கதை கேட்கும் பொழுது என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போல ஒரு பிம்பம் ஏற்படும். கதை குறித்து திரைக்கதை குறித்தும் எனக்கு சரியான புரிதல் இல்லை. அப்படி நிறைய படங்களை நான் தவற விட்டு இருக்கிறேன். ஆனால், அந்த படங்கள் வெளியான பிறகு பார்த்தால் எனக்கு கூறப்பட்ட அந்த கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் இன்றியமையாததாக, வலுவனாதாக இருக்கும்.

இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்ற ஏங்கி இருக்கிறேன்.
அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல கதை திரைக்கதை இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் செய்த அந்த தப்பை நான் இப்போது சரி செய்து கொண்டேன் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil