10 ஆண்டுகளுக்கு பின்.. பாகிஸ்தான் விரைந்த மலாலா யூசப்சாய் - ஏன்?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்காக மலாலா யூசப்சாய் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
மலாலா யூசப்சாய்
பாகிஸ்தான் வெள்ளத்தால், மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் உள்ளது. எட்டு மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் அவர்கள் இப்போது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் $28 பில்லியன் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபானுடன் பொதுவான சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் குழுவான பாகிஸ்தானிய தலிபானின் போராளிகள், பெண் கல்விக்கான மலாலாவின் பிரச்சாரத்தை எதிர்த்து அவரது தலையில் சுட்டது. அப்போது அவருக்கு வயது 15.
பாகிஸ்தான் வெள்ளம்
உயிர்காக்கும் சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, உலகளாவிய கல்வி தேவைக்கு குரல்கொடுக்கத் தொடங்கினர். மலாலா, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இளையவர் என்ற பெருமையும் கொண்டார்.
அதன்பின், 10 ஆண்டு நிறைவுக்குப் பிறகு பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுள்ளார். "பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே அவரது வருகையின் நோக்கம்" என அவரது மலாலா நிதியம் அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மலாலாவின் சொந்த ஊரான மிங்கோராவில் வன்முறை அதிகரிப்பு தொடர்பாக அவரது முன்னாள் பள்ளி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட நிலையில் இவரது வருகை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.