பாக்., தொழிலதிபரை மணந்தார் : மலாலா

pakistan married businessman malala
By Irumporai Nov 10, 2021 01:13 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகிலேயே மிக இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் மலாலா. அவர் நேற்று பாகிஸ்தானைச்சேர்ந்த அசரமாலிக்கை திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் :

இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். அசரும் நானும் வாழ்க்கை துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம்.

பிரிமிங்காமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது. உங்களின் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து நடக்கப்போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி’’- என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் பெண்களின் கல்விக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயது சிறுமியாக இருந்த மலாலா கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிர் தப்பினார்.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்