பணக்கார இல்லத்தரசி.. ஒரு மாத ஷாப்பிங்கிற்கு ரூ.1.86 கோடி - இப்படி ஒரு கணவரா?
தனது ஒரு மாத ஷாப்பிங்கிற்காக இல்லத்தரசி ஒருவர் ரூ.1.86 கோடி செலவு செய்து வருகிறார்.
பணக்கார இல்லத்தரசி
பிரிட்டனை சேர்ந்த பெண் மலாய்க்கா ராஜா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் தனது மனைவி மலாய்க்கா ராஜாவுக்கு மாதாமாதம் ரூ.1.86 கோடி செலவு செய்வதற்காக கொடுக்கிறார்.
இதனால் தன்னை ஒரு பணக்கார இல்லத்தரசி என்று மலாய்க்கா குறிப்பிடுகிறார். தனது ஆடம்பரமான வாழ்வை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பகிர்ந்து வருகிறார். மேலும், பிரேஸ்லெட்கள் மீது பைத்தியமாக இருக்கும் மலாய்க்கா, ஆக்ஸசரிஸ் மற்றும் ஹேண்டு பேக்குகளை வாங்குவதற்காக ஏகப்பட்ட பணத்தை செலவு செய்துள்ளார்.
பிரேஸ்லெட்
அண்மையில் தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், துபாயில் உள்ள மிகப் பெரிய மாலில் பிரபல டிசைனரின் பொருளை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை வான் கிளீப் & ஆர்பெல்சின் (Van Cleef & Arpels) பிரேஸ்லெட்களை ரூ.4.15 லட்சத்திற்கு அவர் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது அடுத்த மாத செலவு பணத்தில் வாங்கப் போகும் பொருட்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.