49 வயது பிரபல நடிகை: போனி கபூர் மகனுடன் 2வது காதல் திருமணம்!
போனி கபூரின் மகனை காதலித்து வரும் பாலிவுட் நடிகை 2வது திருமணம் செய்ய இருப்பதாக சூசகம் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் - மலைகா
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு பேன்ற படங்கஆளி தயாரித்தவர் போனி கபூர். இவரைன் மகன் அர்ஜூன் கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் மலைகா அரோராவை காதலித்து வருகிறார்.
இவர் தமிழில் உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா பாடலுக்கு நடனமாடி இருந்தார். இவருக்கு தற்போது 49 வயது. 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார்.
2வது திருமணம்
இருவரும் கருத்து வெறுபாடு காரணமாக 2017 விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு 20 வயதில் அர்ஹான் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில், மலைகா இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
அதில், நான் சம்மதித்து விட்டேன் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் அர்ஜூன் கபூருடன் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதை சூசகமாக பகிர்ந்துள்ளதாக கருதி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.