மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார் எந்த தொகுதியில் போட்டி?

kamal party political mnm
By Jon Mar 12, 2021 03:09 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.,6 ம் தேதி நடைபெற உள்ளது, பல்வேறு கட்சிகள் தங்களின் அணியில் இடம்பெற கூடிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 70 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம், தற்போது 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு பகுதியிலும், ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியிலும், சிங்காநல்லூரில் துணைத்தலைவர் மகேந்திரன் போட்டியிடுகின்றனர்.  

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார், அதில் கொங்கு மண்டலத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் கோவை மக்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.