70 வயதிலும் எலும்பு நன்றாக இருக்கணுமா? தினமும் இதை மறந்துராதீங்க..
எலும்புகள் ஸ்ட்ராங் ஆகுவது தொடர்பான உணவு குறித்து பார்க்கலாம்.
கால்சியம் சத்து
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் கால்சியம் அளவு இயற்கையாகவே குறைகிறது. இந்த காலகட்டத்தில் எலும்புகள் எளிதில் உடையக்கூடியதாக மாறும்.
அதனால்தான் சிறு வயதிலிருந்தே கால்சியத்தின் மீது கவனமாக இருங்கள். பொதுவாக நமக்கு கால்சியம் சத்து கிடைக்க நாம் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். அதற்கு ஈடான கால்சியம் சத்து தாமரை விதைகளிலும் கிடைக்கிறது.
தாமரை விதை
ஒரு கிளாஸ் பாலில் சிறிது தாமரை விதைகளை கொதிக்க வைத்து சாப்பிட்டால் நல்ல சுகமான தூக்கம் வரும். தசைப்பிடிப்பு அல்லது தசைவலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் இதனை சாப்பிடலாம். இதை சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்வு மேலோங்கும்.
இதில் ஆண்டிஆக்ஸிடெண்ட் சத்துக்கள் இருப்பதால், சர்க்கரை நோயால் ஏற்பட்ட விளைவுகளை கட்டுப்படுத்தும்.
இதில் கலோரி மிக குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் எடுத்துக்கொள்ளலாம்.