முதலாளி குடும்பத்துக்கு சிறுநீர் கலந்த உணவு - பணிப்பெண் கூறிய அதிர்ச்சி காரணம்
முதலாளி குடும்பத்துக்கு வழங்கும் உணவில் பணிப்பெண் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமையலறையில் கேமரா
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் வசித்து வரும் நிதின் கௌதம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரீனா(32) என்ற பெண் கடந்த 8 வருடங்களாக இவர்களது வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக நிதின் கௌதம் குடும்பத்தினருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவே, ரீனா சமைக்கும் சாப்பாட்டின்மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் சமைப்பதைக் கண்காணிக்க சமையலறையில் ரகசிய கேமராவை பொருத்தினர்.
உணவில் சிறுநீர்
அந்த வீடியோவை ஆய்வு செய்த போது, பணிப்பெண் ரீனா பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, அதை மாவில் கலக்கி சப்பாத்தி செய்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், அந்த வீடியோவை போலீசிடம் அளித்து ரீனா மீது புகார் அளித்தார்.
முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ரீனா, வீடியோவை காண்பித்ததும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில், முதலாளி தன்னை எப்போதும் கண்காணித்து கொண்டே இருந்ததோடு, சிறிய தவறுக்கெல்லாம் திட்டியுள்ளார் இதனால் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்
.
பணிப்பெண் ரீனா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.