வாக்களித்துள்ளேன் அதனால் பெண் பார்த்து கொடுங்கள் - பாஜக எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த வாலிபர்

BJP Uttar Pradesh Marriage
By Karthikraja Oct 16, 2024 07:30 PM GMT
Report

வாக்களித்துள்ளதால் தனக்கு பெண் பார்த்து கொடுக்குமாறு எம்.எல்.ஏவிடம் வாலிபர் கோரிக்கை வைத்துள்ளார்.

எம்.எல்.ஏவிடம் கோரிக்கை

தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள், என்னை வெற்றி பெற வைத்தால் உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள். 

வாக்களித்துள்ளேன் அதனால் பெண் பார்த்து கொடுங்கள் - பாஜக எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த வாலிபர் | Man Asks To Bjp Mla Search Bride Because He Voted

இந்நிலையில் தனது தொகுதி எம்.எல்.ஏவிடம் வாலிபர் ஒருவர் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளேன் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

பெண் பார்த்து கொடுங்கள்

உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு பெட்ரோல் நிரப்பும் ஊழியராக வேலை பார்த்து வரும் அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் "தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, உங்களுக்கு என்ன வயது,பெண் பார்க்க என்னை தேர்ந்தெடுத்தது ஏன் என எம்.எல்.ஏ.கேள்வி எழுப்பியுள்ளார்.  எனக்கு 41 வயது என்றும், நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன் எனவும் அகிலேந்திர கரே பதிலளித்துள்ளார். 

அதற்கு எம்.எல்.ஏ. "நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்" என கூறியுள்ளார். மேலும், பெண் வீட்டார் உங்களின் வருமானம் குறித்து கேட்டால் என்ன சொல்வது என கேட்டதற்கு, ரூ.6000 மாத வருமானம் 13 பிகாஸ்(8 ஏக்கர்) நிலம் உள்ளது" என்கிறர்.  நிலம் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்" என எம்.எல்.ஏ. கூறினார்.