மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள் - மஹுவா மொய்த்ரா ஆவேசம்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எம்.பி. மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹுவா மொய்த்ரா
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 6-வது நாளான இன்று, மக்களவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
அப்போது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம்.
ஆளும் கட்சியின் விதி மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை.
மணிப்பூர்
எங்களை - எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். மணிப்பூர் மாநில மக்கள் கிழக்கை பாருங்கள் என கேட்கவில்லை.
கிழக்கில் அரசாங்கம் என்பது செயல்பட்டாக வேண்டும் என்றுதான் மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பதாக ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே..? ஏன்..?" என கேள்வி எழுப்பினார்.