பற்றி எரியும் இலங்கை...- கர்மா விடுமா? புதைக்கவில்லை... விதைக்கிறார்கள்.... - அன்றே சொன்ன ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
நேற்று கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.
ரஜினிகாந்த் வைரல் வீடியோ -
இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத 40 ஆயிரம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதம் என கண்டன குரல்கள் வலுத்தது.
அப்போது, பேசிய நடிகர் ரஜினிகாந்த்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்மா சும்மா விடுமா? ஈழத் தமிழர்களை புதைக்கிறார்களா? விதைக்கிறார்கள்? ஒருநாள் அது முளைத்து உங்களை அழிக்கும் என்று பேசியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலைவர் அன்றே சொல்லிவிட்டார்... கர்மா உங்களை இன்னும் சும்மா விடாது என்று நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்ட்களை அள்ளித் தெறித்து வருகின்றனர்.
Words of a pure soul...#SriLankaCrisis #SriLankaProtests #andresonarRajinikanth #Rajinikanth pic.twitter.com/9CNTfJRfsq
— Thalaivarforlife ? (@DTinakaran) July 9, 2022