’யாருக்கும் இது மாதிரி நடக்கக்கூடாது.!’ மனம் திறந்த மகிலா ஜெயவர்த்தனே
இந்திய அணி உலகப் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனால் சமூக ஊடகங்களில் இது தொடர்பான நினைவுகளை ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை இறுதிப் போட்டியில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது. இலங்கையின் கேப்டனாக இருந்த மகிலா ஜெயவர்த்தனே சிறப்பான விளையாடி சதமடித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரிலே சேவாக் டக் அவுட் ஆக சச்சினும் விரைவிலே வெளியேறினார். தடுமாறிய இந்திய அணியை கம்பீர் - கோலி பார்ட்னர்ஷிப் நிலைபெறச் செய்தது. இறுதியில் அதிரடியாக விளையாடிய தோனி சிக்ஸர் அடித்து உலக கோப்பையை இந்தியாவுக்காக பெற்றுத் தந்தார்.
யாராலும் மறக்க முடியாததாக அமைந்தது அந்த உலக கோப்பை. தோனி மற்றும் கம்பீரின் ஆட்டத்திற்கு இணையாக ஜெயவர்த்தனேவின் ஆட்டமும் பாராட்டப்பட்டது. உலக கோப்பை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்த ஜெயவர்த்தனே, “என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஆட்டம் அது. அதைப் போல நான் சிறப்பாக ஆடியதாக நினைவில்லை.
அதே சமயம் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதும் வருத்தமே. யாருக்கும் இந்த மாதிரியான அனுபவம் அமையக்கூடாது” என்றார்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil