ரஷிய 'பீர்' கேன்களில் மகாத்மா காந்தியின் படம் - வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!
ரஷிய 'பீர்' கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தி
இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மகாத்மா கந்தி சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ரிவார்ட் பீர் என்ற நிறுவனம் பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படம் மற்றும் அவருடைய கையெழுத்தும் அச்சிடப்பட்டு விற்பனை செய்து வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் "மகாத்மா ஜி" என்ற பெயரில் ரஷிய மதுபான ஆலையான ரிவார்ட் பீர் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தைக் கேலி செய்வதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் மதிப்புகளையும், பல கோடி இந்தியர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
ரஷிய பீர்
இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மகாத்மா காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்கைப் பெரிய அளவில் ஊக்குவித்தவர். மதுவில் அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக 2019-ஆம் ஆண்டில், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று மதுபான பாட்டில்களில் காந்தியின் படத்தைப் பதித்ததற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.