தாமதமாக வேலைக்கு வந்த ஊழியர்கள்.. CEO கொடுத்த தண்டனை - Time Travel செய்தது எப்படி?
தாமதமாக வந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நூதன தண்டனை வழங்கியுள்ளார்.
CEO
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்தால் நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் சில நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். அப்படி ஒரு பிரபலமான நிறுவனத்தில் ஊழியர்கள் அடிக்கடி வேலைக்குத் தாமதமாக வந்துள்ளனர்.
இதனை அறிந்த அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நூதன தண்டனை வழங்கி உள்ளார். இது குறித்து பயனர் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,’’ சிஇஓ ஆல் பள்ளிக்கூடமான அலுவலகம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நூதன தண்டனை
அதில் ,தனது தலைமை நிர்வாக அதிகாரி மதியம் 12 மணிக்கு அனைத்து அலுவலக நுழைவு வாயில்களையும் மூடிவிட்டதாகவும், தாமதமாக வந்தவர்களை வெளியில் இருக்கக் கட்டாயப்படுத்தியதாக’’ கூறியுள்ளார். மேலும் நேரம் தவறாமை ,ஒழுக்கம் குறித்து அவர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார்.
அப்போது எங்களது தலைமை நிர்வாக அதிகாரியின் செயலை கண்டு எங்களது பள்ளி நாட்களுக்கு டைம் டிராவல் செய்ததாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் 2 நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததாகக் கூறினார். இந்த பயனரின் விவரம் எதுவும் அந்த பக்கத்தில் வெளியிடப்படவில்லை.