காந்தியை வதம் செய்யும் துர்கை - இந்து மகாசபை வைத்த சர்ச்சை சிலை!

Festival West Bengal Viral Photos
By Sumathi Oct 03, 2022 10:25 AM GMT
Report

மகிசாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துர்கா பூஜை 

மேற்கு வங்கம், ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பண்டிகைக்காக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை அகில இந்திய இந்து மகாசாபா என்ற அமைப்பு செய்துள்ளது. இந்த பந்தலில் துர்கை தேவி உள்ளிட்ட அம்மன், கடவுகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காந்தியை வதம் செய்யும் துர்கை - இந்து மகாசபை வைத்த சர்ச்சை சிலை! | Mahatma Gandhi Idol Kept As Ausra In Durga Puja

இதில் துர்கை தேவி மகிசாசுகரனை வதம் செய்யும் நிகழ்வை கொலு பொம்மையாக வைத்திருந்தனர். இதில், மகிசாசுரன் இருக்க வேண்டிய இடத்தில் அண்ணல் காந்தியின் தோற்றம் கொண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை சிலை

காந்தி பொம்மையை துர்கை அம்மன் வதம் செய்வது போல கொலு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் விழா ஏற்பாட்டாளர்கள் பொம்மையை மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெறவில்லை, எதார்த்தமாக நடந்தது என இந்து மகாசபா அமைப்பினர் விளக்கம் தந்துள்ளனர். அதேவேளை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இது தேச தந்தையை அவமதிக்கும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதை கவலையுடன் பார்க்க வேண்டும். இந்த அவமதிப்பிற்கு பாஜக பதில் அளிக்குமா" என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.