லிவ்-இன் காதலி கொலை - உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்த கொடூரம்
காதலன் லிவ்-இன் காதலியை கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
லிவ்-இன்
மும்பை, விஜய் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, வந்து பார்த்ததில் படுக்கையறையில் கட்டிலின் அடியிலிருந்த காலி இடத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தப் பெண் மேகா ஷா (37). நர்ஸாகப் பணியாற்றிவந்தார். இவரும் ஹர்திக் ஷா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
கொலை
ஆனால், ஹர்திக் ஷா வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் செலவு தொடர்பான தகராறில் பெண்ணை கொலை செய்து கட்டிலின் அடியில் மறைத்துவைத்துள்ளார்.
வீட்டிலிருந்த சில மரச்சாமான்களை விற்பனை செய்துவிட்டு, அதில் கிடைத்த பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீஸார் மத்தியப் பிரதேச மாநிலம் நாக்டா என்ற இடத்தில் சென்றபோது ரயிலில் சோதனை நடத்தி ஹர்திக்கை கைது செய்தனர்.