ஆர்யாவுடன் லிவ் இன் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் நயன்தாரா - பிரபல நடிகர் சர்ச்சைப் பேச்சு

Arya Nayanthara
By Nandhini Dec 31, 2022 01:13 PM GMT
Report

ஆர்யாவுடன் லிவ் இன் டூ ரிலேஷன்ஷிப்பில் நயன்தாரா இருந்து வந்ததாக பிரபல நடிகர் சர்ச்சைப் பேச்சால் சமூகவலைத்தளங்களில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

actress-nayanthara-arya-actor-relationship

ஆர்யாவுடன் ரிலேஷன்ஷிப்

இந்நிலையில், பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குறித்து பேசியுள்ள விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இது குறித்து பேசுகையில்,

ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்து வந்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ளார். விக்னேஷ் சிவனை தனக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரியாகவே வைத்துக்கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாவற்றையும் நயன்தாரா செய்து வருகிறார். விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். மருமகளாக செய்ய வேண்டிய எல்லா கடமையையும் அவர் செய்துள்ளார்.

ஆனால், அந்த காலத்துல நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன் சில ஆண்டுகள் ஆர்யாவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் மலையாளிகள் என்பதால் நெருக்கமாகவே பழகி வந்தனர்.

ஆர்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நயன்தாரா, அவரிடம் கதையைக் கேட்டுதான் ஓகே சொல்வார். அந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்து வந்தார். காரணம், கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர் நடிகர் மறுத்து வந்தார் என்றார்.

தற்போது பிரபல நடிகர் நயன்தாரா குறித்து பேசியுள்ள விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது.