மகாராஷ்டிராவில் கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த வீடு - வைரலாகும் வீடியோ

Viral Video Maharashtra
By Nandhini Aug 23, 2022 05:11 PM GMT
Report

மகாராஷ்டிராவில் கண் இமைக்கும் நேரத்தில் வீடு ஒன்று இடிந்து தரைமட்டமான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இடிந்து விழுந்த வீடு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனி மோர்கான். இவருடைய வீடு ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு அட்டைப் பொதி போல் இடிந்து விழுந்துள்ளது நிகழ்வு மகாராஷ்டிராவில் 2வது முறையாக நடந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Maharashtra - viral video