மும்பையில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - இடிபாடுகளில் சிக்கிய 6 பேர்
மும்பை, போரிவாலி பகுதியில் திடீரென்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
மும்பை, போரிவாலி பகுதியில் திடீரென்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 6 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணியில் தீயணைப்புத்துறை
இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் மும்பை, போரிவாலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து நொறுங்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

There is a building collapse near Sai Baba Mandir at Borivali. Please avoid going to that area as there may be unusually high traffic.#Mumbai #buildingcollapse pic.twitter.com/hKENcIu8cW
— Prasant Kaamath (@kaamath_p) August 19, 2022
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan