கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலே உயிரிழந்த வீரர் - அதிர்ச்சி வீடியோ
கிரிக்கெட் மைதானத்திலே ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர்
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள நலா சோபாராவில் வசித்து வருபவர் விஜய் படேல்(30). கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜல்னாவில் உள்ள டாக்டர் ஃப்ரேசர் பாய்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் பங்கேற்று விளையாடிய விஜய் படேல், காலை 11 மணியளவில் சக பேட்ஸ்மேனுடன் பேசி விட்டு கிரீஸை நோக்கி நடந்து சென்றார். அப்போது திடீரென கிரீஸ் அருகே அமர்ந்த அவர் அப்படியே சரிந்து விழுந்தார்.
உயிரிழப்பு
உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
படேலின் மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
जालन्यात क्रिकेट खेळताना एका खेळाडूचा हृदयविकाराचा झटका येऊन मृत्यू झाल्याची घटना समोर आली आहे. #Cricket #heartattack #CricketerHeartAttack #jalna pic.twitter.com/A2laTwpfuw
— Chandrakant Jagtap (@chandrakant4441) December 30, 2024
மேலும் இந்த மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் சரிந்து விழுந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.