மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற இளைஞர் - அடித்தே துரத்திய சிறுமி!

Viral Video Maharashtra Crime
By Sumathi Mar 10, 2023 10:22 AM GMT
Report

கொள்ளையனைச் சிறுமி ஒருவர் அடித்துத் துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயின் பறிப்பு

மகாராஷ்டிரா, புனே நகரில் மூதாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியிடம் வழிகேட்பது போலப் பேசி அவரது தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.

மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற இளைஞர் - அடித்தே துரத்திய சிறுமி! | Maharashtra Chain Snatch Small Girl Attacked Thief

அந்த மூதாட்டி கொள்ளையனைத் தடுக்க முயன்றபோது, அதிர்ச்சியடைந்த அவரது பேத்தி (10) கையிலிருந்த பையைக் கொண்டு கொள்ளையனைத் தாக்க தொடங்கினார்.

அதனால் கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவியது. அதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.