குட்டி யானையை கொடூரமாக சித்ரவதை செய்த கிராம மக்கள் - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ...!
அசாமில் குட்டி யானையை செருப்பால் அடித்து கொடூரமாக சித்ரவதை செய்த கிராம மக்களின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குட்டி யானையை செருப்பால் அடித்து கொடூரம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அசாம், ஹோஜாயில் யானைக்குட்டி ஒன்று அதன் தாயிடமிருந்து பிரிந்து கிராம பகுதிக்குள் நுழைந்தது.
இந்த குட்டியானையைப் பார்த்ததும் கிராம மக்கள் சிலர், ஈவு இரக்கமின்றி செருப்பால் அடித்தும், இரும்பு கொம்பால் கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், குட்டி யானையின் காதை இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா... அந்த குழந்தை யானையிடம் இப்படி கொடூரமாக நடந்துக் கொண்ட உங்களை கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலரோ இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Assam: Baby #elephant tortured by villagers in Hojai
— Khushboo Singh (@imprincy_singh) October 14, 2022
One of the most inhumane treatments meted out to #wildlife was noticed in #Assam recently
The baby elephant, who was ill-treated by the villagers, got separated from his mother after the villagers chased away a herd@PetaIndia pic.twitter.com/wRZqTnX9ub