அமாவாசை 2024: இந்த ஒரு வழிபாடு போதும் - அவசியம் நோட் பண்ணுங்க!
அமாவாசையில் வழிபடும் பூஜைகள் குறித்து அறிந்துக் கொள்வோம்.
மகாளய அமாவாசை
பித்ரு பட்சம் என்று அழைக்கப்படும் மகாளய அமாவாசை இந்துக்களிடையே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்காக இந்த நாள் அற்பணிக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆன்மாக்களை சாந்திபடுத்த பல்வேறு வகையான பூஜைகளை செய்து அவர்களை வழிபடுவது வழக்கம். இந்நாளில் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறை
அரச மரம் என்பது அனைத்து கடவுள்களும் குடியிருக்கும் ஒரு மரமாக கருதப்படுகிறது. நமது முன்னோர்களும் அதில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு சரியான வாழ்க்கை பாதையை காட்டி வெற்றி பெறச் செய்வார்கள். மேலும், அன்று முன் வாசப்படியில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. தெற்கு திசை என்பது எமதர்மனின் திசையாக கருதப்படுகிறது.
எனவே அந்த திசையில் விளக்கு ஏற்றி வைப்பது முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைவதற்கு உதவும். நான்கு முகம் கொண்ட விளக்கை தெற்கு திசையில் ஏற்றி வைப்பதன் மூலமாக நீங்கள் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
