பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்; ஆதாரத்திற்கு ஆடையை அகற்ற கூறிய நீதிபதி!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்ணின் காயங்களை அறிய ஆடையை நீதிபதி அகற்ற கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரௌலி மாவட்டத்தில், கடந்த மாதம் பட்டியலினப் பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஹின்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இந்நிலையில், புகார் அளித்த பெண், மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அந்த நீதிபதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிடம் ஆடைகளை அகற்றி காயங்களைக் காண்பிக்கக் கேட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், அதற்க்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறினார்.
அகற்ற கூறிய நீதிபதி
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து பேசிய துணை எஸ்.பி செல்மீனா, ``பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் கடந்த மார்ச் 30 அன்று ஹிண்டவுன் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அந்த நீதிபதி அந்தப் பெண்ணின் காயங்களைப் பார்ப்பதற்காக ஆடைகளை அகற்றச் சொன்னதாக அந்தப் பெண் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், மாஜிஸ்திரேட் மீது IPC மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவு 345 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.n