ஜூன் இல்லை ஜூலை தான் வரும் - மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல்!
மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகை
திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பான மகளிர் உரிமை தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.7 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜூன் 4 வரை தேர்தல் விதிகள் உள்ளதால்,
தேர்தல் விதிமுறைகள்
புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு ஜூன் 15க்கு பதில் ஜூலை 15ம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புதிய பயனாளிகளை சேர்க்க விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாம் வாரம் வழங்கப்படவுள்ளது.
மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்படவுள்ளது. இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.