ரூ.1000 மகளிர் உரிமை தொகை; இனி சிக்கல் - நீக்கப்படும் பயனாளிகள், அரசு முக்கிய அறிவிப்பு!

Tamil nadu
By Sumathi Oct 23, 2023 03:48 AM GMT
Report

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

உரிமைத் தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமை தொகை

தொடர்ந்து, பயனாளர்களின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பல அறிவுறுத்தல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நெறிமுறைகள்

அதில், ஆண்டுதோறும், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில், மின்சாரப் பயன்பாடு, தொழில் வரி, வருமான வரி, சொத்து வரி, வாகனப் பதிவு உள்ளிட்டவை சரி பார்க்கப்படும்.

மேல்முறையீடு

அதற்கு ஏற்ப, மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில், தானியங்கி முறையில் புதுப்பிக்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை; பிடித்தம் செய்யக்கூடாது - வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மகளிர் உரிமைத் தொகை; பிடித்தம் செய்யக்கூடாது - வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தானாக புதுப்பிக்கப்படுதல் மூலம் தகுதி நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகள் முறையிட விரும்பினால், இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.