இல்லத்தரசிகளே.. உங்க வங்கி கணக்கில் ரூ.1 வந்திருக்கா? வரவில்லையென்றால் என்ன செய்யலாம்?

Tamil nadu
By Sumathi Sep 14, 2023 03:25 AM GMT
Report

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ளது.

உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்திட்டத்தில் இணைய மாநிலம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு,

இல்லத்தரசிகளே.. உங்க வங்கி கணக்கில் ரூ.1 வந்திருக்கா? வரவில்லையென்றால் என்ன செய்யலாம்? | Magalir Urimai Thogai 1 Rupee Messege For Womens

தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்திருக்கிறார்கள். தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான (ATM) ஏடிஎம் கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாகவும் கிடைக்க போவதாக கூறப்படுகிறது.

விண்ணப்பம்

வருகிற 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததுமே, அனைவரது வங்கி கணக்குக்கும் ரூ.1000 சென்றுவிடும். பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த 2 நாட்களாகவே, ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் வருகிறது. மேலும், செல்போன் வழியாகவும், விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. விண்னப்பம் ஏற்கப்படாத நிலையில், மேல்முறையீடு செய்யலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாளுக்குள் இணைய சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீர்க்கப்படும்.