மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 - முதலமைச்சர் ஆலோசனை !
மகளிருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இத்திட்டம் அண்ணா பிறந்தநாளான வரும் செப்டெம்பர் 15-ஆம் தேதி முதல் செயற்படுத்தப்படும் என்று சட்டசபையில் மு.க . ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை ரூ.1000 வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆலோசனை
இந்நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக நாளை பிற்பகலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.