பெண்களுக்கு ரூ.1000; விண்ணப்பப்பதிவு முகாம் தொடக்கம் - இதுதான் ரூல்!
உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உரிமைத் தொகை
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், இந்த 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இதனை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டது.
முகாம் தொடக்கம்
இந்நிலையில், தருமபுரி தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் , நேரத்தில் குடும்பத் தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை5.30 மணி வரையும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.