பாஜகவில் இணைகிறார்; பதறிய மாஃபா பாண்டியராஜன் - உடனே கொடுத்த விளக்கம்@
மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் விளக்கமளித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜன்
மக்களவை தேர்தலை முன்னிட்டு களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பிரதிநிதிகள் கட்சிகள் மாறிவருகின்றனர். அண்மையில், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார்.
தொடர்ந்து சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறப்போவதாகவும் தகவல் பரவி வருகிறது. அந்த வரிசையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணைவுள்ளதாக செய்தி ஒன்று பரவி வந்தது.
வதந்திக்கு விளக்கம்
அதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" எனக் குறிப்பிட்டு வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் ! https://t.co/JO12cZ80qN
— Pandiarajan K (@mafoikprajan) February 25, 2024
மேலும், 3 வருடங்களுக்கு முன் பழைய பதிவு ஒன்றில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவுப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்த பதிவையும் தற்போது நினைவூட்டியுள்ளார்.