ரயில் தீ விபத்து; தெற்கு ரயில்வே மற்றும் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
ரயில் விபத்து
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலின் பெட்டியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கும் மளமளவென பரவியது.
உடனே ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
நிவாரணம்
இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர்ந்து, உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.