மதுரை ரயிலில் சமையல் செய்யப்பட்டதா? பெரும் தீ விபத்து - 9 பேர் உடல் கருகி பலி!
சுற்றுலா விரைவு ரயிலின் பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலின் பெட்டியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கும் மளமளவென பரவியது.
உடனே ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
9 பேர் பலி
உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.
விசாரணையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர் அப்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.