Saturday, May 10, 2025

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம்

Chennai
By Thahir 3 years ago
Report

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மருந்து கிடங்கில் தீ விபத்து 

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இருந்து காலை முதல் கரும்புகையானது வெளியே வந்துள்ளது.

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம் | Fire In Medicine Warehouse

இதையடுத்து தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே அங்கு 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவத்தில் 3 வானங்கள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.