தட்டில் வரும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது - கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!
தட்டில் வரும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
அர்ச்சகர்கள்
பொதுவாகக் கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் சுவாமிக்குக் காண்பிக்கப்படும் ஆரத்தி தட்டில் காணிக்கையாகப் பணத்தைப் போடுவர்.இது வழக்கமான ஒன்றுதான்.ஆனால் தற்பொழுது தட்டில் வரும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என அக்கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோயில் நிர்வாகம்
அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது.
பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.