மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - நடக்க முடியாமல் முடங்கிய கொடுமை!
பள்ளி மாணவனை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளி மாணவன்
மதுரை, தாடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் நாகராஜ். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுவன் முழங்காலில் ஏற்பட்ட வலியுடன் துடித்துக் கொண்டே வந்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், பள்ளியில் மாணவர்கள் யார் யார் சிகரெட் குடிக்கிறார்கள் பீடி குடிக்கிறார்கள் என்று தலைமை ஆசிரியர் பிரபு கேட்டார். அதற்கு நான் தெரியாது என்று சொல்லிவிட்டதால் மூங்கில் பிரம்பால் காலில் கடுமையாக அடித்து விட்டார்.
தாக்கிய ஆசிரியர்
அதனால் வலி தாங்க முடியவில்லை என்று சொல்லி அழுதுள்ளார். அதனையடுத்து சிறுவன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலின் காயத்தில் சதை பகுதிக்குள் சீல் இருந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிறுவன் நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அதன்பின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்ய பெற்றோர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.