குழந்தைகளை கொடூரமாக தாக்கிய குடிகார தந்தை - பதை பதைக்கும் வீடியோ
மது போதையில் தனது இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக தாக்கும் தந்தையின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரமாரி தாக்குதல்
ஆந்திரா மாநிலம் கோதாவரியில் தாடே பள்ளிகுடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவருடைய மனைவி குவைத்தில் உள்ள வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
தான் சம்பாத்தித்த பணத்தை தனது கணவருக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் தான் அனுப்பும் பணத்தை மது வாங்க பயன்படுத்துவதை அறிந்த மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தனது இரண்டு பெண் குழந்தைகளையும் துன்புறுத்தி வந்துள்ளார்.
குடிபோதையில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தாறுமாறா தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.     
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    